தேரே இஷ்க் மெயின்
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தேரே இஷ்க் மெயின்.
இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த ராஞ்சனா மற்றும் அட்ராங்கி ரே ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றன. இதில் ராஞ்சனா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.
அதே போன்ற காதல் கதையில் உருவாகியுள்ள தேரே இஷ்க் மெயின் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது.
முன் பதிவு
இந்த நிலையில், தேரே இஷ்க் மெயின் படத்தின் முன் பதிவு துவங்கியுள்ளது. இதில் முதல் நாள் முன் பதிவில் மட்டுமே ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பாக பார்க்கப்படுகிறது.
