நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் தாடி பாலாஜி. அவர் விஜய்யுடன் சச்சின் போன்ற படங்களில் நடித்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தாடி பாலாஜி விஜய்யின் முகத்தை தனது நெஞ்சில் டாட்டூவாக குத்தி இருந்தார். அதன் பின் அவருக்கு தவெக கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படாத நிலையில், டாட்டூவை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதன் பின் அவர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
வேறு கட்சியில்
இந்நிலையில் தற்போது தாடி பாலாஜி “லட்சிய ஜனநாயக கட்சி” என்ற புது கட்சியில் இணைந்து இருக்கிறார்.
அந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
மீண்டும் அந்த டாட்டூ விஷயத்தை குறிப்பிட்டு தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
