“யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, அமைதி வழியில் போராடியவர்களைப்
பொலிஸார் கடுமையாகச் சித்திரவதை செய்துள்ளனர். இந்தப் பாரதூரமான மனித உரிமை
மீறல்கள் தொடர்பில், நீதியான அணுகுமுறைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இவ்வாறு வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான
நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு
“பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பை எதிர்த்த வேளை, இடம்பெற்ற தாக்குதல் என்பதால்,
இதற்கு ஒரு போதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம்.
அரச கொள்கையும், சட்டங்களும், சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்களப் பேரினவாத
ஆக்கிரமிப்புக்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன
நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம்.
எனவே, எம் மீது பொலிஸார் பிரயோகித்த சித்திரவதைகள் தொடர்பாக, இலங்கையில்
உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதரங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு
உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள்
நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களும் தலையிட வேண்டும்.
இது தொடர்பில் ஆதராங்களுடன் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
