Home முக்கியச் செய்திகள் தையிட்டி போராட்டத்தில் நடந்த தரமான சம்பவம் : கிழித்து தொங்க விடப்பட்டது யார் !

தையிட்டி போராட்டத்தில் நடந்த தரமான சம்பவம் : கிழித்து தொங்க விடப்பட்டது யார் !

0

தமிழர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி பௌத்த விகாரை குறித்த விடயம் தற்போது நாளுக்கு நாள் பாரிய அதிர்வலையை கிளப்பி வருகின்றது.

குறித்த விகாரையை அகற்றி தமிழ் மக்களுடைய காணிகள் மீட்கப்பட்டு அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக்கோரி தற்போது தமிழர் பிரதேசங்களில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

குறித்த போராட்டங்களுக்கு தமிழ் அரசியல் தலைமைகள் முதல் தமது பெருத்த ஆதரவை தெரிவித்து வருகின்ற நிலையில், போராட்டம் பெரியளவில் வெடித்தும் அரச தரப்பிலிருந்து முறையாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

உள்நாட்டை தாண்டி சர்வதேச அளவிலும் குறித்த விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், விகாரையை இடிப்பது என்பது இனவாதத்தை தூண்டலாம் ஆகையால் அதனை தவிர்த்து வேறு வகையில் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்ற நிலையில் ஏன் இந்த விகாரையை அகற்ற முடியாது என மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்திருந்தார்.

தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த 12ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டக்களத்தில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தென்னிலங்கைக்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதியா என அவர் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில், இது தொடர்பில் அவர் எமது ஜபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய மேலதிக விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றையை சக்கரவியூகம் நிகழ்ச்சி,

 

https://www.youtube.com/embed/y8OKqYJyEyM

NO COMMENTS

Exit mobile version