யாழ்ப்பாணம் (Jaffna) – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர்
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்றையதினம் (15) மீண்டும் ஆரம்பமாகி இன்று வரை
நடைபெற்று வருகின்றது.
முன்வைக்கப்படும் கோரிக்கை
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு
வரும் நிலையில் இம்மாத பௌர்ணமி தினத்தையொட்டி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.