Home உலகம் நைஜீரியாவில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி! 95 பலி பலர் படுகாயம்

நைஜீரியாவில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி! 95 பலி பலர் படுகாயம்

0

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி வெடித்து சிதறியதில் 95 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுயாமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு(15.10.2024) இடம்பெற்றுள்ளது.

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில் எரிபொருள் நிரம்பிய பாரஊர்தி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கால்வாய் ஒன்றிற்குள் விழுந்துள்ளது.

விபத்துச் சம்பவம்

இந்நிலையில், அதிலிருந்து கசிந்து வெளியேறிய எரிபொருளை பெருமளவு மக்கள் சேகரித்துக்கொண்டிருந்த வேளை அந்த பாரஊர்தி வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 95 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 50க்கும் அதிகமானவர்கள் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டில் 1531 எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்திகள் விபத்துக்குள்ளாகிய நிலையில் அதில் 535 பேர் உயிரிழந்ததுடன் 1,142 படுகாயங்களுடன் தப்பியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version