தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர்.
இவர்களுடன் இணைந்து தீபா, செம்பன் வினோத், ஆர்.கே. சுரேஷ், சரவணன், ரோஷினி ஹரிப்ரியன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தலைவன் தலைவி படம் முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
டி54 படப்பிடிப்பு பணியில் பிஸியாக வலம் வரும் தனுஷ்!.. வெளியான ஷூட்டிங் ஸ்டில்
எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், 5 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் ரூ. 44 கோடி வசூல் செய்துள்ளது.
