Home இலங்கை அரசியல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு சஜித் அணிக்கு அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு சஜித் அணிக்கு அழைப்பு

0

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள (Thalatha Atukorale) இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (10) ஐக்கிய தேசியக்கட்சியின் 27ஆவது பொதுச்செயலாளராக பதவியேற்றதன் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று 50 நாட்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சந்தித்து இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டுமென தாம் கூறியிருந்ததாகவும் தலதா அத்துகோரள இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டதாகவும், அதனால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கடந்த 03.01.2025 அன்று தலதா அத்துகோரளவை பொதுச் செயலாளர் பதவிக்கு நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version