Home இலங்கை அரசியல் சட்டத்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே ஒன்று பட்டிருக்கிறோம்: தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு

சட்டத்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே ஒன்று பட்டிருக்கிறோம்: தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு

0

சட்டத்தால் வடக்குக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள்
அனைவரும் நாங்கள் ஒன்று பட்டுக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர் தம்பிப்போடி வசந்தராஜா
தெரிவித்துள்ளார்.

பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பாக்கியச்செல்வம்
அரியநேத்திரனின் மட்டக்களப்பு, அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது
இல்லத்தில் நேற்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசிய பொது கட்டமைப்பு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில்
தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட சகல விடயங்களும்
குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்தப் பிரச்சினைகளை இன்று பொறுப்பெடுக்கின்ற புதிய
அரசும் சர்வதேசமும் நிச்சயமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள்
விடுகிறோம்.

இதேவேளை, பொது கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் இன்று
சிதைந்து கிடந்த தமிழினத்தை, பிரிந்து கிடந்த தமிழ் தேசிய பரப்பிலேயே பணி
புரிகின்ற அரசியல் கட்சிகளை, ஒன்றிணைத்த ஒரு பெரும் கைங்கரியத்தை மேற்கொண்டு
இருக்கிறார். 

தமிழ் மக்கள் இன்று இரண்டு இலட்சத்தி 26 ஆயிரம் வாக்குகளை
அவருக்கு செலுத்தி வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக இணைத்து இருக்கின்ற ஒரு
நிலைமையை கொண்டிருக்கின்றது.

சட்டத்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள்
அனைவரும் நாங்கள் ஒன்றுபட்டுக் கொண்டிருக்கின்றோம், ஒற்றுமையாய் இருக்கிறோம்
என்பதை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

எதிர்காலத்திலும் அதனை விரிவுபடுத்துவோம்
என்ற தோரணையில் அவர்கள் வாக்களித்து இன்று உலகுக்கு தெரியப்படுத்தி
இருக்கிறார்கள்.

இந்த அரசை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு
நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும்”என அவர்
தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version