Home இலங்கை அரசியல் தமிழீழத்தில் தன்னாட்சி முறையே எமது நிலைப்பாடு: தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்!

தமிழீழத்தில் தன்னாட்சி முறையே எமது நிலைப்பாடு: தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்!

0

தமிழீழத்தில் தன்னாட்சி முறையை உருவாக்குவதே எமது நிலைப்பாடு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து (Arun Thambimuthu) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் பல வாக்குகள் கொடுக்கப்பட்டாலும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்காது என்ற யதார்த்ததை புரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய இனத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமைமையும் வலியுறுத்தும் ஆரம்பபுள்ளியாகவே இந்த ஜனாதிபதி தேர்தலை பார்க்கின்றேன்.

சிங்கள தேசம் அவர்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளது.

தமிழ்தேசம் தனது நிலைப்பாட்டை இந்த உலகிற்கு கூற வேண்டும்.

தமிழ்தேசிய இனமாக மாகாணசபை சரியான முறையை கையாண்டிருந்தால் நாம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தையை கொண்டிருக்கலாம்.

பொதுவேட்பாளர் விடயம் எமக்கு கிடைத்த சந்தர்ப்பமாகும் அதனை நாம், பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் தேசிய இனத்தின் நெடுநாள் நோக்கத்தை நோக்கிச்செல்ல வேண்டும்.

மேலும், 13 ஆம் திருத்தம், பொது வேட்பாளர் விடயம் போன்றவற்றை அலசி ஆராய்கின்றது இந்த களம் நிகழ்ச்சி….

https://www.youtube.com/embed/fTLVe72kor4

NO COMMENTS

Exit mobile version