Home சினிமா தங்கலான் முதல் நாள் மொத்த வசூல்! தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தங்கலான் முதல் நாள் மொத்த வசூல்! தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று தங்கலான் படம் ரிலீஸ் ஆனது. சுதந்திர தினம் விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது.

விக்ரம் மற்றும் மாளவிகா ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளை பெற்றாலும், குழப்பமான கதை, பல இடங்களில் தொய்வு என படம் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முதல் நாள் வசூல்

இந்நிலையில் தங்கலான் படம் உலகம் முழுக்க முதல் நாளில் வசூலித்த தொகையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

26.44 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version