Home இலங்கை அரசியல் தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி

தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி

0

75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தனிநபரின் அடாவடித்தனம்

தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையான போக்கு கட்சிகளில் காணப்படுகின்றது.

சுமந்திரனின் எதேட்சையதிகார தனித்துவ சிந்தனையால்தான் இன்று தமிரசுக் கட்சியானது படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, தனிநபரின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தாத தலைமை இருந்து என்ன பயன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை அத்தோடு சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியனின் கட்சிகள் மீதான ஆதிக்கம், பாதிக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழரசுக் கட்சியில் எதிர்காலம் மாற்றம் என்பவை தொடர்பில் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/p4vgRxGOh9Y

NO COMMENTS

Exit mobile version