Home இலங்கை அரசியல் மதுபானசாலை விவகாரம் குறித்து அங்கஜன் வெளியிட்ட தகவல்

மதுபானசாலை விவகாரம் குறித்து அங்கஜன் வெளியிட்ட தகவல்

0

மதுபானசாலைக்கான அனுமதியை நான் பெற்றதாக கூறிய சுதந்திர கட்சியின் (SLFP) செயலாளர் அது குறித்து எந்த
ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) விசனம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால்
அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (27) நடைபெற்ற இளையோருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்தார்.

மதுபானசாலை விவகாரம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மதுபானசாலை விவகாரம் தொடர்பாக இம்முறை தேர்தலில்
அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆதாரங்களற்ற விவாதங்களாகவே அவை காணப்படுகின்றன. தேர்தல் பிரசாரங்களில் ஒருவரை ஒருவர் சேறுபூசும் தன்மை காணப்படுகின்றது.

எனது சுதந்திரக் கட்சியின் செயலாளர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, நான் எனது
மக்களுக்காக ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன் என்ற அடிப்படையில் ஜனாதிபதி
வேட்பாளர் இருக்கும் அரசியல் மேடையில் இதனைக் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சி

நானே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே
நாடாளுமன்ற உறுப்பினர். நான் போகும் இடமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி செல்லும்
இடமாக பார்க்கப்படும்.

அவருடைய தேவை என்னை ஒரிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இருந்தார். சேராத
இடத்தில் இவ்வாறு கதைகள் வருகிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும்
முன்வைக்கவில்லை.

இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு
நாம் தரமிறங்கவேண்டும்“ என தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/the-bar-issue-information-published-by-angajan-1724838751

NO COMMENTS

Exit mobile version