Home இலங்கை அரசியல் சஜித்தினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை: விளக்கம் கோரும் ரணில்

சஜித்தினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை: விளக்கம் கோரும் ரணில்

0

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் ‘பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 

நாட்டை மீட்டெடுத்த பயணம்

“நாட்டை மீட்டெடுத்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல இன்னும் இரண்டும் மூன்று வருடங்கள் தேவைப்படும்.

நான் ஏற்றுக்கொண்டபோது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி சரிவடைந்திருந்தது.

மறுமுனையில் ரூபாயின் பெறுமதியும் கடுமையாக சரிந்தது. எதிர்பார்ப்புக்கள் அற்றுப்போன தருணத்திலேயே அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க என்னால் முடிந்தது.

தற்போது இயலும் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தை ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு முன்வைத்துள்ளேன்.

நாம் கடன் வாங்குவதையும், பணம் அச்சிடுவதையும் நிறுத்தியுள்ளோம்.

கதிர்காம கந்தனின் திருவிழாவில் நெருப்புக்கு மத்தியில் நடப்பதைப் போன்று எமது நிலை உள்ளது.

தனியாக செயலாற்றும் வல்லமை

ஜனாதிபதி என்பவர் தனியாக செயலாற்றும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.

சஜித்துக்கு நன்றாக ஆங்கிலம் பேச தெரிகிறது.

வில்லியம் சேக்ஸ்பியரும் அவரின் ஆங்கில வகுப்புகளுக்கு வருகிறார் என்று அறிந்தேன்.

இவ்வாறான வேடிக்கைகளை விடுத்து
ஜனாதிபதியுடன் இருக்கும் அணியில் யார் இருக்கிறார் என்பதை முதலில் அவதானியுங்கள்
அவர் ஜனாதிபதி பதவிக்கு சிறந்தவர் எனில் அவருக்கு வாக்களியுங்கள்.

தலைவர் என்றால் எந்த அணியுடனும் வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். இன்று ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரண்டு பொருளாதார குழுக்கள் இருக்கின்றன.

ஒரு குழுவில் ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹசீம், எரான் விக்ரமரத்ன போன்ற எம்.பிக்கள் உள்ளனர்.

மற்றைய அணியில் நாலக கொடஹேவாவும், ஜீ.எல்.பீரிஸூம் உள்ளனர்.ஒரு குழுவின் பொருளாதார திட்டங்களில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் மற்றைய குழுவின் திட்டங்களில் நிராகரிக்கப்படுகின்றன.

இரண்டு பொருளாதார முறைமை

அதனால் சஜித் அணியினர் இரண்டு பொருளாதார முறைமைகள் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டனர்.

அவை இரண்டும் பூட்டான் போன்ற வறிய நாடுகளில் பின்பற்றப்படும் கொள்கையாகும்.

அந்த நாடுகளின் நிலைக்கு இலங்கை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாட்டை மீட்டெடுத்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல இன்னும் இரண்டும் மூன்று வருடங்கள் தேவை” என்றார்.

NO COMMENTS

Exit mobile version