Home இலங்கை சமூகம் யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல், நேற்றையதினம் (26.09.2024) யாழ்ப்பாண பல்கலைக்கழக
வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்
தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பலரும் கலந்துகொண்ட நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி
நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக
மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.

பிரித்தானியாவில் நினைவேந்தல்

இதேவேளை, தியாகதீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவுநாளை
நினைவுகொள்ளும் விதமாக நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் நினைவேந்தல்
அனுஷ்டிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து உணவுத் தவிர்ப்பு
விழிப்புணர்வுடன், 37வது ஆண்டு நினைவுநாள் உணர்வெழுச்சியுடன்
அனுஷ்டிக்கப்பட்டது.

Source: https://tamilwin.com/article/the-commemoration-of-thyaga-deepam-in-jaffna-1727385668

NO COMMENTS

Exit mobile version