Home இலங்கை அரசியல் ரணில் சார்பு புதிய ஜனநாயக முன்னணிக்கு தொடரும் சர்ச்சை

ரணில் சார்பு புதிய ஜனநாயக முன்னணிக்கு தொடரும் சர்ச்சை

0

Courtesy: Sivaa Mayuri

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவை நியமித்தமை தொடர்பாக புதிய ஜனநாயக முன்னணிக்குள் மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தநிலையில், கட்சியின் தலைமையை தம்மைக் கலந்தாலோசிக்காமல் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கட்சியை ஆலோசிக்காமல் ரவி கருணாநாயக்க தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார் என கூறப்பட்டது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் 

இந்நிலையில் தற்போது, எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிப்பதற்கு ஏகமனதாக இணக்கம் காணப்பட்ட நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் முக்கிய பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அந்தப் பதவிக்கு பைசர் முஸ்தபாவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரமேஸ் பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலைமை, தேர்தல் தோல்விக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள தொடர் பின்னடைவு என்றே கருதப்படுகிறது.

2024 பொதுத் தேர்தலில் ‘எரிவாயு கொள்கலன்;’ சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version