தமிழ் தேசியத்தின் முக்கிய அரசியல் கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி தற்போது தென்னிலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் முனைப்புடன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசியத்தின் சார்பில் பொதுவேட்பாளராக பா. அரியநேத்திரன் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது.
ஆனால் சஜித்துக்கு ஆதரவென்றும், அரியநேத்திரன் போட்டியில் இருந்து வெளியேறவேண்டும் எனவும் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது.
பொதுவேட்பாளருடன் எவ்வித கலந்துரையாடலையும் நடத்தாத சுமந்திரன் எதன் அடிப்படையில் அவரை விலக வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தார்?
சஜித்துடன் ஒருமுக கலந்துரையாடலில் ஈடுபட்ட சுமந்திரன் தரப்பு என் பொதுவேட்பாளரை புறக்கணித்தனர்?
இங்கு கட்சிக்குள் தென்னிலங்கை அரசியல் நிலைப்பாடுகள் நுழைந்துள்ளதா?
இந்நிலையில் இதுதொடர்பில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (thepakaran) விளக்கமளித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் நடைமுறை சாத்தியக்கூறுகளை, கட்சியின் யாப்புரீதியிலான விளக்கங்களையும் தொடரும் ஒளியவனத்தில் எடுத்துக்கூறுகின்றார்…
[MDIADD3
]