Home இலங்கை சமூகம் மதுபோதையில் தொடருந்தை செலுத்திய சாரதி இடைநடுவில் தப்பியோட்டம்

மதுபோதையில் தொடருந்தை செலுத்திய சாரதி இடைநடுவில் தப்பியோட்டம்

0

மதுபோதையில் தொடருந்தை செலுத்திய சாரதி இடை நடுவில் அதனை கைவிட்டு ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு ஓடிய சாரதி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (30) கொழும்பில்(colombo) இருந்து கண்டி(kandy) நோக்கி பயணித்த தொடருந்து சாரதியின் தவறான நடத்தை காரணமாக திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து கண்டி

நேற்று முன்தினம் முற்பகல் 10.40 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி ஓடத் தொடங்கிய தொடருந்தில் பணியாற்றிய சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பதட்டமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென தப்பியோட்டம்

கண்டி நகருக்கு அருகில் உள்ள சுடுஹும்பொல என்ற இடத்தில் தொடருந்தை நிறுத்தி விட்டு தொடருந்தில் இருந்து தப்பி ஓடிய போது, பயணிகள் அவரை துரத்திச் சென்று பிடித்து, உதவி ஓட்டுநரை ஈடுபடுத்தி தொடருந்து கண்டி தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், மதுபோதையில் தொடருந்தை ஓட்டியவரை தொடருந்து போக்குவரத்து ஆய்வாளர் மூலம் தொடருந்து பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தொடருந்து மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடையும். ஆனால் மதியம் 2.30 மணிக்கே வந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

Source: https://ibctamil.com/article/the-drunken-driver-who-abandoned-the-train-1719870096

NO COMMENTS

Exit mobile version