ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்திற்குரிய
வேட்புமனுக்களை கையளித்துள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச்
செயலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
சங்கு சின்னம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகின்றது.
வேட்பாளர் பட்டியலில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி
சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு
சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் குறித்த வேட்புமனுக்களை கையளித்துள்ளனர்.