Courtesy: Sivaa Mayuri
தேர்தல் சட்டம் தற்போதும் செல்லுபடியாகும் நிலையில் இருப்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து முழுமையடையாத வாக்குப்பதிவு செயல்முறை என்பவற்றின் அடிப்படையில் தேர்தல் ஆணையகம் இதனை தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உள்ளூராட்சி; தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், அரசியல் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்கள் விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அத்தகைய நோக்கங்களுக்காக அரச சொத்துகளைப் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உள்ளூராட்சி அமைப்புகளின் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், தேர்தல முழுமையடையாததாலும் தேர்தல் சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து அமுலில் உள்ளது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இந்தக் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறுவது, சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உட்பட்டது என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.