Home இலங்கை அரசியல் விடுதலைப் புலிகளால் கொள்ளப்பட்ட மக்கள் : அருண் சித்தார்த்தின் ஆணவப் பேச்சு

விடுதலைப் புலிகளால் கொள்ளப்பட்ட மக்கள் : அருண் சித்தார்த்தின் ஆணவப் பேச்சு

0

சிறிலங்காவின் (Sri Lanka) இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் ( Arun Siddharth) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றைய தினம் (04.07.2025) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்பொழுது
விசாரணைகள் இடம் பெறுகின்றது.

விடுதலைப் புலிகள்

ஆனால் ஒரு அமைப்பு சாராமல் விடுதலைப் புலிகளுக்கு வழக்கு தொடரவும் முடியாது என்ற நிலைப்பாடு நீதிமன்றத்தில் காணப்படுகின்ற பொழுது எங்களுக்குரிய நீதியினை பெற்று தருபவர்கள் யார்?

குறிப்பாக 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் துணுக்காய்ப்பகுதியில் அமைந்துள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் ஒரு சித்திரவதை முகாமினை இயக்கி வந்ததாகவும் பின்னர் அங்கிருந்து அவர்கள் கொலை செய்யப்பட்டு பவானி குளம் சிவபுரம் பகுதியில் எரியூட்டி அவர்களுடைய சாம்பல் நீரில் கரைக்கப்பட்டது.

எங்களுக்குரிய நீதி விசாரணை நாங்கள் தேடிக் கொள்ளும் அதேவேளை எப்பொழுது எங்கே எங்களுடைய நீதி விசாரணைகளுக்காக நாங்கள் போராடுகின்றோமோ அந்த நேரத்தில் எங்களுடைய சந்தேகங்களும் ஐயா பாடுகளும்
நீக்கப்பட வேண்டும் அதேபோல் நீதியான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மேலும், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் துணுக்காய்ப்பகுதியில் அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சேவை அறிக்கை இடப்பட்ட இடங்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அந்தப் பகுதியிலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார். 

https://www.youtube.com/embed/VG4_buzEBMA

NO COMMENTS

Exit mobile version