Home இலங்கை அரசியல் இலங்கை வரலாற்றில் அமெரிக்கா விதித்த முதல் தடை

இலங்கை வரலாற்றில் அமெரிக்கா விதித்த முதல் தடை

0

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோர் மீது அமெரிக்க தடை விதித்திருந்தது.

இது இலங்கை வரலாற்றில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அமெரிக்காவால் வழங்கப்பட்ட முதல் தடை என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஊழல் செய்தவர்களுக்கு எதிராக அமெரிக்கா முதன்முதலாக தடை விதித்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிக்கைகள் அப்போது ஆச்சரியமாக எழுதியிருந்தன.

மேலும், இது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது ஒரு மறைமுக அழுத்தத்தை பிரயோகிப்பதாகவே பார்க்கப்படுகின்றது.

தேர்தலில் பாரிய வெற்றியை பதிவு செய்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து இலங்கையுடன் ஒருமித்து பயணிக்கும் அமெரிக்காவின் நோக்கமே இந்த நடவடிக்கைகளில் இருந்து புலப்படுகின்றது.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version