Home இலங்கை அரசியல் சிக்கிய ரணில் – சாமர்த்தியமாக தப்பிய ராஜபக்ச : வேடிக்கை பார்க்கும் அரசு

சிக்கிய ரணில் – சாமர்த்தியமாக தப்பிய ராஜபக்ச : வேடிக்கை பார்க்கும் அரசு

0

தற்போதைய அரசாங்கமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத்தான் அவசரப்படுகின்றதே தவிர மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) எதிராக நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டுவதில்லை என அமெரிக்க (United State ) சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போத ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வாக்காளர்கள்தான் ராஜபக்ச வாக்களார்கள் என்பதனால் ராஜபக்ச மீது நடவடிக்கை எடுப்பதில் அரசிற்கு அக்கறை இல்லை.

தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன் இனி வரும் காலங்களிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசின் நிலை, ரணில் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை, ராஜபக்சவின் ஊழல் மோசடிகள் குறித்த அரசின் நடவடிக்கை மற்றும் அநுரவின் எதிர்கால அரசியல் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/leiyN8PvHcs

NO COMMENTS

Exit mobile version