அரசாங்கத்தை இழுத்துச் செல்வதற்கு அரசுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு துப்பாக்கி வேட்டு தேவையாக உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்
துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (2025.11.04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
புஸ்வானமாகும் குற்றச்சாட்டுகள்
நாளின் துப்பாக்கி வேட்டு என்று,எதிர்க்கட்சியின் எதிர்ப்பு வாதங்களை குறிப்பிடும் அரசு,சூட்டு சம்பவத்தின் பின்னர் வரும் செய்திகளில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு வாதங்கள் வலுவிழக்கப்பட்டு,
துப்பாக்கித்தாரி வந்து சூடு நடத்தியது, தப்பிச் சென்ற விதம் மற்றும் சிசிரிவி காட்சிகள் பேசு பொருளாக்கப்படுகிறது.எமது குற்றச்சாட்டுகள் புஸ்வானம் ஆகிவிடுகிறது.இன்று ஒரு துப்பாக்கி சூடு என்றாலும் நாளையும் ஒன்றும் தேவை அரசுக்கு.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு காலத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்றுக் கொண்டு வந்தார்.பின்னர் இந்தியாவுக்கும் சென்றார்.அப்படியே அவர் ஜனாதிபதியானார்.
அவ்வாறான ஒரு பரிமாற்றம் சஜித் பிரதமதாசவுக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.கூட்டுறவு சங்க தேர்தல்களில் சஜித் தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறார்.இந்தியாவும் அழைப்பு விடுத்து சென்றுள்ளார்.அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்றார்.
