Home இலங்கை சமூகம் பருத்தித்துறை புதிய சந்தையில் ஒட்டப்பட்ட அறிவித்தலினால் ஏற்பட்டுள்ள குழப்பம்

பருத்தித்துறை புதிய சந்தையில் ஒட்டப்பட்ட அறிவித்தலினால் ஏற்பட்டுள்ள குழப்பம்

0

பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தை நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்படுவதாக பருத்தித்துறை நகரபிதா புதிய சந்தை வாயிலில் இன்று அறிவித்தலை ஒட்டியுள்ளார்.

மரக்கறி சந்தைக்கு வர்த்தகர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாமாகவே சென்று வியாபாரம் செய்வதற்கு சென்றுள்ள நிலையில் ஐந்து மரக்கறி வியாபாரிகள் புதிய சந்தையில் வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சபை தவிசாளர் நேற்று வெள்ளிக்கிழமை புதிய சந்தை தற்காலிகமாக பூட்டப்படவுள்ளதாகவும் நவீன சந்தை தொகுதிக்கு செல்லுமாறு கூறியிருந்தார்.

புதிய சந்தை தொகுதி பூட்டு 

இந்நிலையில் அவர்கள் பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு செல்லாத நிலையில் இன்று அதிகாலையில் புதிய சந்தை தொகுதி பூட்டு போட்டு பூட்டப்பட்டதுடன் காலை எட்டுமணியளவில் தவிசாளர் குறித்த புதிய சந்தை தொகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தல் ஒட்டியுள்ளார்.

எனினும் எஞ்சியுள்ள புதிய மரக்கறி சந்தை வியாபாரிகள் நவீன சந்தை தொகுதிக்கு செல்ல மாட்டோம் என சந்தை வாயிலிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய சந்தையிலிருந்து எஞ்சிய ஐந்து வியாபாரிகளையும் பழைய
இடத்திற்கு மாற்றுமாறு கோரி தவிசாளரால்  பருத்தித்துறை பொலிஸ்
நிலைத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய சந்தையிலிருந்து வர்த்தகர்கள் நவீன சந்தை தொகுதிக்கு
மாறியமை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு
பதிவு செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் எதிர்வரும்
திங்கட்கிழமை வழக்கை பருத்தித்துறை நீதிமன்றில் பதிவு செய்யும்வரை
தற்காலிகமாக புதிய சந்தையை திறக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிந்தது.

இந்நிலையில்
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தையை திறக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு சம்மதிக்காத புதிய சந்தை வியாபாரிகள் பொலிஸில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version