Home இலங்கை அரசியல் ஜே.வி.பியின் சர்வதிகாரம் தொடர்கிறது: மணிவண்ணன் குற்றச்சாட்டு

ஜே.வி.பியின் சர்வதிகாரம் தொடர்கிறது: மணிவண்ணன் குற்றச்சாட்டு

0

ஜே.வி.பியின் சர்வதிகாரம் தொடர்கிறது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு
செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகம் 

“ஜேவிபி, முன்னர் கருதப்பட்ட மார்க்சிச லெனினிசக் கொள்கைகள் உடைய ரஷ்யா ,சீனா
,கியூபா என இடதுசாரிகள் இருகின்ற நாடுகளை போல ஜனாநாயக விரோதமாக
செயற்படுகின்றது.

அவர்களால் தேர்தல் திணைக்களத்தின் ஊடாக தேர்தல்களை இல்லாது செய்கின்ற
சூழலும் ஏற்படும்.

ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் இந்த உள்ளூராட்சி தேர்தலை சரியாக
பயன்படுத்த வேண்டும்.

ஊழல் பொருளாதார மீட்சி என கூறி இவ்வாறான தரப்புக்கள் ஜேவிபியை மண்ணிலே வேரூன்ற
விடாது பொறுப்புடன் செயற்படவேண்டும்” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version