Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என்பதை காட்டும் முக்கிய நிகழ்வு

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என்பதை காட்டும் முக்கிய நிகழ்வு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமா? இல்லையா? என்ற தளம்பல் நிலைப்பாடுகளின் முடிவு, ஜூலை 17 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

17 ஆம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதி தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் கைகளுக்கு சென்று விடும் என்ற அடிப்படையில், இந்த எதிர்ப்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய ஏற்பாடுகள்

இந்தநிலையில், வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு மும்முரமாக செயற்பட்டு வருகிறது.

அதற்கான முக்கிய ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக  இராஜகிரியவில் உள்ள ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம், தற்போது சுத்தப்படுத்தப்பட்டு வர்ணப் பூச்சுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

NO COMMENTS

Exit mobile version