Home இலங்கை சமூகம் யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை! செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்..

யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை! செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்..

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்கள் கிராம அலுவலர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்
வைத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

 டித்வா புயல் 

வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்ட போதும் எங்களுக்கு எந்த விதமான
கொடுப்பனவுகளும் தரப்படவில்லை.

கேட்க நாதியற்றவர்களாக இருந்ததால் வேறு
வழியின்றி ஊடகத்தை அழைத்துள்ளோம்

டித்வா புயல் இலங்கையை தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எமது வீடுகளும்
வெள்ளத்தால் நிரம்பி இருந்தது. உறவினர் வீட்டில் ஒரு சில குடும்பம் தங்கி
இருந்தோம்.

எங்களுடைய வீடுகள் பலத்த காற்றால் சேதமடைந்த போதும் எமது வீட்டை கிராம அலுவலர்
இதுவரை வந்து பார்க்கவில்லை.சேத விபரங்களை அறிக்கையிடவில்லை.நிரந்தர வீடு
என்று கூறிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி
அடிக்கடி கூறி வருகிறார் ஆனால் உண்மையில் பாதிப்படைந்த மக்களை அந்த நிவாரணம்
போய் சேருவதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்

பாதிக்கப்படாத மக்களுக்கு எமது பகுதியில் வெள்ள நிவாரணம்
கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெள்ள நிவாரணம்

ஆனால் உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களை யாரும் கவனிக்கவில்லை

கிராம அலுவலர் கூட இதுவரை பார்க்கவில்லை.காலில் காயமுற்று நடக்க
முடியாதவர்களாக துன்பப்படுகின்றோம்.

அரசாங்கம் வழங்கும் நிவாரணத்தை வழங்க ஏன் அதிகாரிகள் தயங்குகின்றார்கள்

எந்த வீடாக இருந்தாலும் சரி புயலால் சேதமடைந்த வீட்டை வந்து கிராம அலுவலர்
பார்வையிட வேண்டுமல்லவா? அதனையும் வந்து பார்வையிடவில்லை

அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் பலர் பயனடைந்து வருகிறார்கள் ஆனால் உண்மையில்
வறுமைக்கோட்டில் கஷ்டப்படும் எங்களுக்கு எந்த விதமான திட்டங்களும்
தரப்படவில்லை.

வெள்ள நிவாரணம் கூட கிடைக்கவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அயலவர்களின் வீட்டில் குடியிருக்கும் எங்களை
யாரும் வந்து நலம் விசாரிப்பதாக இல்லை.ஒரு சிலரின் தூண்டுதலில் நாங்கள்
அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றோம்.

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்

ஒரு சில கிராமத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் பாரபட்சம் காட்டி பாதிக்கப்பட்ட
மக்களை கைவிட்டு இருப்பது வேதனை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.

 உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் போய் சேர்ந்ததா என்பதை
ஆராய ஜனாதிபதி சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும்
பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

காலா காலம் நாம் வீடு இன்றி தற்காலிக வீட்டில் துன்பப்பட்டு வருகிறோம்.

அரசாங்கம் கொடுக்கும் வெள்ள நிவாரணத்தை கூட அதிகாரிகள் கொடுப்பதற்கு மனம்
இல்லாமல் இருக்கிறார்கள்

ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி பதிக்கப்பட்ட
எங்களுக்கு கொடுப்பவை பெற்றுத் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.

மக்களின் வேண்டுதலின் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வத்திராயன்
பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது வத்திராயன் கிராம
அபிவிருத்தி சங்கத் தலைவர் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் ஊடகவியலாளர்
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version