Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்றையதினம் (24.09.2024) நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கும், வெளிநாட்டலுவல்கள்,
பொது நிர்வாகம், கல்வி, மத விவகாரங்கள், ஊடகத்துறை, இளைஞர் மற்றும்
விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளார்.

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள், தொழில் உறவுகள் அமைச்சு, சுகாதாரம், சிறுவர்
மற்றும் மகளிர் விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, சுற்றாடல் போன்ற
அமைச்சுகளின் அமைச்சர் பதவிக்கு விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளார். 

துறைமுகங்கள் விமானசேவை, விவசாயம், மீன்பிடி, வர்த்தகம், மின்சக்தி மற்றும்
எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சுப் பதவியொன்றுக்கு
லக்‌ஷ்மண் நிபுண ஆரச்சியும் நியமிக்கப்படலாம். 

புதிய அமைச்சரவை

ஜனாதிபதி அநுரகுமார பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, நிதி, முதலீடு,
கைத்தொழில் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற அமைச்சுப் பதவிகளை
தன் வசம் வைத்துக் கொள்ளவுள்ளார். 

இதற்கிடையே நாளை குறுகிய நேரத்துக்கு நாடாளுமன்றம் கூட்டப்பட்டு,
லக்‌ஷ்மண் நிபுண ஆரச்சி எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று
தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னரே அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. அதன் பின் நாளை நள்ளிரவுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

NO COMMENTS

Exit mobile version