கொழும்பு நகரத்தை கட்டியெழுப்ப அனைத்து மக்களின் ஆதரவும் அவசியம் என கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த வெற்றி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பதை தாண்டி மக்களின் வெற்றியாகும்.
அதிகாரம் என்பது மக்களிடம் தான் இருக்க வேண்டும்.
மக்களின் ஆதரவு
அப்போது தான் இந்த நாட்டை நாம் முனேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
கொழும்பு மக்கள் சிறப்பாக வாழக்கூடிய அழகான ஒரு நகரத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
இதற்கு கொழும்பு மாநகர சபையின் 117 உறுப்பினர்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை. அத்துடன், அனைத்து மக்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை.
இதேவேளை, பொதுமக்களின் அதிகாரத்துடன் முன்னோக்கி பயணிப்பதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
