நாட்டில் மிகுந்த பரபரப்புடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை ஜனாதிபதி வேடர்பாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போன்று தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்று ஒருவரை நியமித்துவிட்டு எந்த ஜனாதிபதி வேடர்பாளருக்கு வாக்களிக்கலாம் என தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் யோசனை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதற்கு மத்தியில் தமிழரசு கட்சியின் முடிவு என்ற ரீதியில் ஜனாதிபதி வேடர்பாளர் சஜித்தை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பு குறித்து எனக்கு தெரியாது என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
இப்படி பல குழப்பங்கள் நிறைந்து நகரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழர் தரப்பிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய புதிய ஜனாதிபதி குறித்து கலந்துரையாடுகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,