Home இலங்கை அரசியல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு

வீடு வீடாக சென்று பிரசாரம் செய்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, தற்போதைய சட்டத்தின் கீழ், வாக்காளர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதில் ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணிவகுப்புகள்

அத்துடன், வீடு வீடாகச் சென்று பிரசாரத்தின் போது அரசியல் அணிவகுப்புகளை நடத்துவது பொதுவாக சட்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களுக்கு மாத்திரமே விளம்பர சுவரொட்டிகளை காட்சிப்படுத்த அதிகாரம் உண்டு  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version