Home முக்கியச் செய்திகள் பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி : பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி : பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

0

பாலியல் இலஞ்சம் கோரியதாக அரச அதிகாரி ஒருவருக்கு  20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் (High Court of Colombo) இன்று (09) பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏழு வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாய் ஒருவரிடம் குறித்த அதிகாரி பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளார்.

சிறைத்தண்டனை 

குறித்த சம்பவம்  2025 மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, பெண்ணை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற நிலையில் குறித்த அதிகாரி இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்பின்பு, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில், இன்று நீதிமன்றம் குறித்த நபருக்கு  20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 you may like this…!

https://www.youtube.com/embed/2z7uZhU2E6g

NO COMMENTS

Exit mobile version