Home இலங்கை சமூகம் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலான இனவாத கருத்துக்கள்: அநுர தரப்பு கடும் எச்சரிக்கை

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலான இனவாத கருத்துக்கள்: அநுர தரப்பு கடும் எச்சரிக்கை

0

மாவீரர் தின நிகழ்வுகளை வைத்து இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை எவரேனும்  வெளியிட்டால் அதற்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் களங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் கொண்டாட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பழைய இனவாத அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சில அரசியல்வாதிகள் தயாரில்லை என ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான அவதூறு

மேலும், அரசியல் ரீதியாக எவ்வாறான அவதூறுகள் கூறப்பட்டாலும் மௌனம் காக்கத் தயார் எனவும், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டால் அதற்கு கடும் பதிலடி கொடுப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களை கண்டிப்பான நிலைப்பாட்டில் இருந்து கையாள்வதாகவும், மேலும் முறிவுகள் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் அதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், மக்களை ஒடுக்குவதற்கு சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும் கூறிய அமைச்சர், வரலாற்றில் இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடியதை நினைவு கூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version