Home இலங்கை குற்றம் பருத்தித்துறை கொல்களத்தை முற்றுகையிட்டு மாடுகளை மீட்ட பொலிஸார்

பருத்தித்துறை கொல்களத்தை முற்றுகையிட்டு மாடுகளை மீட்ட பொலிஸார்

0

பருத்தித்துறை – துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் அங்கிருந்த மாடுகளை மீட்டுள்ளனர்.

குறித்த முற்றுகை நடவடிக்கை இன்று (11.06.2024) இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது, இறைச்சியாக்கப்படவிருந்த மூன்று பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில்
வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின்
அடிப்படையில், நீண்ட தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் மேற்படி சட்டவிரோத
கொல்களத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு

சந்தேக நபர் கைது

இதன்போது, சாவகச்சேரி மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை
பொலிஸார் மீட்டதுடன் ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில்
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமராக்கப்பட்டு வருகின்றது. 

அதேவேளையில் மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஏனைய மாடுகள்
இறைச்சியாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சுற்றிவளைப்பின் போது பசு மாடுகளை
கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுடன் பிரதான சந்தேக நபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள்: பொலிஸார் செய்த நெகிழ்ச்சி செயல்

பத்தரமுல்லை விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version