Home இலங்கை மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை: அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை: அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

0

நடந்து முடிந்த இந்திய (India) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை (Sri Lanka) மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் (08) மூன்றாவது தடவையாக பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.

நரேந்திர மோடியின் பதவி நீடிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார்.

பதவி இழப்பாரா மோடி…! பா.ஜ.க RSS இடையில் உச்சக்கட்ட முறுகல்

இலங்கையின் பொருளாதாரம்

அத்தோடு, சமகாலத்தில் இலங்கை மீது இந்தியா செலுத்தும் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதுவரை இணைந்து செயற்பட்டுள்ளதுடன் இந்தக் காலப்பகுதி இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவின் ஆதிக்கத்திற்குள் சிக்கியுள்ளது.

சிதைக்கப்பட்ட பா.ஜ.கவின் அரசியல் நகர்வு: ஸ்டாலின் வகுக்கும் புதிய திட்டம்

முதலீட்டு வலையமைப்புகள்

அத்தோடு,  இலங்கையின் முதலீட்டு வலையமைப்புகள் பல இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு திருகோணமலை (Trincomalee) எண்ணெய் குதம் உட்பட பல்வேறு முதலீடுகள் இந்தியாவின் கைகளில் உள்ளதோடு இந்த நிலைமையே எதிர்காலத்திலும் தொடரும்.

இதனடிப்படையில், இது பொருளாதார ரீதியில் இலங்கையில் மிக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version