Home இலங்கை அரசியல் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி!

மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆசிர்வாதம்

மகா நாயக்க தேரர்களை நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதிக்கும் மகா நாயக்க தேரர்களுக்கும் இடையில் சிறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம்

இந்த சந்திப்புகளில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோனும் கலந்துகொண்டுள்ளார்.

கலந்துரையாடல்

இதற்கமைய முதலில் மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து பீட மகா நாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீட அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஆகியோரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளதுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் அஸ்கிரி பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார்.

ரணில் – பசில் இன்று முக்கிய சந்திப்பு: தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

  

மேலும் முதியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண, முருந்தெணியே தம்மரதன தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினார்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version