தென்மாகாண அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மற்றொரு கைதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது,
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்றதாக
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறப்பு விசாரணை
தப்பியோடியவர், ஹெரோயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டவராவார்.
இந்தநிலையில் அவரை மீண்டும் கைது செய்ய அதிகாரிகள் சிறப்பு விசாரணையை
ஆரம்பித்துள்ளனர்.