மட்டக்களப்பு (Batticaloa) வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும்
இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைவதை முற்றாக தடை
செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (22.04.2024) வாகரை பிரதேச செயலகத்திற்கு
முன்பாக பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்’, ‘சூழலை பாதிக்கும் இறால் வளர்ப்பு
திட்டம் நமக்கு வேண்டாம்’, ‘அகழாதே, அகழாதே, எம் மண்ணை அகழாதே,’ ‘வெளியேறு
வெளியேறு கொள்ளையர்களே வெளியேறு போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு
கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் அறவிடப்படும் பணம்: வெளியான அதிர்ச்சி தகவல்
கலந்துரையாடல்
பிரதேச செயலக பிரதான நுழைவாயில் கதவினை பூட்டியவாறு எவரும் உள்ளே
செல்லாத வகையில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைய கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர்
எந்திரி ஜீ. அருணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை
மேற்கொண்டுள்ளார்.
எனினும், தாம் பதவிக்கு வந்தது முதல் இவ்வாறான செயற்பாட்டிற்கு புதிதாக எதுவிதமான
அனுமதியும் வழங்கவில்லை என்றும் இனியும் வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று அரசாங்க அதிபர், போராட்டத்தில்
ஈடுபட்டோர் மற்றும் பிரதேச சிவில் அமைப்புக்களை சந்தித்து மேற்படி விடயங்கள்
தொடர்பான நேரடி கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க அதிபர் தரப்பில்
பதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வ
விஜயமொன்றினை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் சமூகம் தர
முடியாமல் உள்ளதாக ஆளுநர் தரப்பில் பதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்படி விடயங்களை
கருத்திற்கொண்ட போராட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை
வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டதன் பின்னர் அவ்விடத்தினை விட்டு கலைந்து
சென்றுள்ளனர்.
வவுனியாவில் கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி
கொழும்பில் தீக்கிரையாகிய மர ஆலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |