Home இலங்கை பொருளாதாரம் தொடர் வீழ்ச்சியில் இலங்கை ரூபா – வெளியானது இன்றைய பெறுமதி..!

தொடர் வீழ்ச்சியில் இலங்கை ரூபா – வெளியானது இன்றைய பெறுமதி..!

0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(01.06.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வீழ்ச்சி காணும் இலங்கை ரூபா

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அதன் விற்பனை பெறுமதி 335.70 ரூபாவாக காணப்படுகின்றது.

கடந்த 29ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

Source: https://tamilwin.com/article/the-rupee-continues-to-fall-1780295237

NO COMMENTS

Exit mobile version