Home இலங்கை பொருளாதாரம் தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (09) தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.38 ரூபாவாகவும், விற்பனை விலை 342.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த 03ஆம் திகதிக்குப் பின்னரான ஒரு வார காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கான கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகூடிய அளவை எட்டியுள்ள நாள் இன்றாகும் என மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அழுத்தத்திற்குள்ளாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

Source: https://tamilwin.com/article/the-value-of-the-sri-lankan-rupee-continues-fall-1780992784

NO COMMENTS

Exit mobile version