Home இலங்கை சமூகம் குட்டிமணியின் உடல் புதைக்கப்பட்ட பகுதி! மறைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்

குட்டிமணியின் உடல் புதைக்கப்பட்ட பகுதி! மறைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்

0

1983 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் உருவெடுத்த கறுப்பு ஜூலை போராட்டம், வடக்கு கிழக்கையும் ஆக்கிரமித்தது.

அந்த ஆக்கிரமிப்பின் வடுக்கள் இன்னும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணங்களாய் இருந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இதேவேளை, கருப்பு ஜூலையை வாய்ப்பாக பயன்படுத்தி ஜூலை 25 ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகள் மீதான படுகொலை இடம்பெற்றது.

இந்த படுகொலையில் தான் தமிழர் விடுதலைக்காக போராட்டங்களில் ஈடுபட்டு அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலரும் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக பல தியாகங்களை செய்த குட்டிமணியும் இந்த அரசியல் கைதிகளில் ஒருவராக இருந்தார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி, தனது கண்கள் பறிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அன்று வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் குட்டிமணியின் மகன் கூறும் விடயங்களை வெளிப்படுத்துகிறது தொடரும் காணொளி…


https://www.youtube.com/embed/YqFjAZHh3Qs

NO COMMENTS

Exit mobile version