Home இலங்கை அரசியல் அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

அறுகம்பை விவகாரத்தின் தொடக்கப்புள்ளி! ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து விளக்கம்

0

Courtesy: Sivaa Mayuri

அறுகம்பையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வெலிகம மாநகர முதல்வரும் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அறுகம்பையில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பின்மை தொடர்பில் கொழும்பின் தூதரகங்கள் வெளியிட்ட எச்சரிக்கையை அடுத்தே இந்த விடயத்தை ரெஹான் ஜயவிக்கிரம வெளியிட்டுள்ளார்.

அறுகம்பையில் சில இஸ்ரேலிய வணிக உரிமையாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் நீண்ட காலமாக நீடித்து வருகின்றன.

இலங்கைக்கான விளைவுகள்

இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நியாயத்தை உறுதி செய்யுமாறு பல்வேறு அரசாங்கங்களுக்கு பல முறையீடுகள் செய்த போதிலும், அவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ரெஹான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையை, அவசரமாகத் தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த அவர், இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், இலங்கைக்கான விளைவுகள் நாம் எதிர்பார்ப்பதை விட மிகக் கடுமையாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஹீப்ரூ மொழியிலும் கடைகள்

இந்தநிலையில், இஸ்ரேலியர்களை வலியுறுத்துவதாக கூறி கோரிக்கை ஒன்றையும் அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நீங்கள் வேறு இடங்களில் செய்தது போல் எங்கள் நிலங்களை வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்கிரமிக்க முடியாது. நீங்கள் சட்டவிரோத வணிக நடைமுறைகளை நடத்த முடியாது மற்றும் மற்றவர்களுக்கு வாய்ப்புகளை அழிக்க முடியாது. இந்த அழகான தீவுக்கு நாங்கள் உங்களை வரவேற்றிருந்தாலும், இது உங்கள் நாடு அல்ல, நீங்கள் இந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அறுகம்பையில் இஸ்ரேலின் உத்தியோகபூர்வ ஹீப்ரூ மொழியிலும் பல கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version