என்னை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
“என்னை கொலை செய்ய முயற்சிப்பதாக வெளிநாட்டு முகவர் ஒருவரினால் கண்டறியப்பட்டதாக கடந்த ஜீலை 20 அன்று செய்தி ஒன்று வந்துள்ளதை நான் உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.
கொலைசெய்வதற்கு ஒரு சூழ்ச்சி
தங்களிடம் ஒரு கடிதத்தை தந்துள்ளேன். பொலிஸ்மா அதிபரிடமும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
இலங்கை தனியார் சஞ்கிகையில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
என்னை கொலைசெய்வதற்கு ஒரு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாக வெளிநாட்டு உளவுப்பிரிவினால் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் ஆளும் கட்சியில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் இதிலே தொடர்பு பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
குறித்த இராஜாங்க அமைச்சர் கடந்த காலப்பகுதியில் கொலைக்குற்றச்சாட்டுக்களை கொண்டவர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குற்றச்சாட்டுடன் தொடர்பு கொண்டவர்.
இது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
[24MZLDE
]