அநுரவுக்கு ஆதரவளிப்பவர்கள் கோட்டாபயவின் யுகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க
வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இனங்களிடையே மோதலைத் தூண்டும் இனவாதப் பேச்சுக்களை நிறுத்தவும் சமய
நம்பிக்கைகளை மலினப்படுத்தும், குரோதப் பேச்சுக்களை தடைசெய்யுமாறும் நாம்
கோரியுள்ளோம்.
பொருளாதார முன்னேறம்
இனவாதம், மதவாதம் மேலோங்கியுள்ள நாடுகளால் பொருளாதாரத்தில்
முன்னேற முடியாது. சிங்கப்பூர், மலேஷியா என்பவை முன்னேறியுள்ளதற்கு, அங்கு இவை
இல்லாதமையே காரணம்.
இவ்வாறு ஈடுபட்டால், அந்நாடுகளில் கடுமையான சட்டங்களால்
தண்டிக்கப்படுகின்றனர்.
கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. அவரின் ஆட்சியைப்
பயன்படுத்தி, சிலர் நிலைமையைப் பயன்படுத்தினர்.
இந்நிலைமையைப் போக்குவதற்கு இந்தியாவே முதலில் 04 பில்லியன்
டொலர் நிதியுதவி வழங்கியது.
இவ்வுதவியைக் கொண்டு பெற்றோல், எரிபொருட்கள்
மற்றும் தட்டுப்பாடான பொருட்களை ரணில் கொள்வனவு செய்தார்.
வரிசை யுகம் நீங்கத்தொடங்கியது. இந்த வகையில் இந்தியாவை மறக்க முடியாது” என்றார்.