Home முக்கியச் செய்திகள் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருளான அம்மாச்சி உணவகம்

பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருளான அம்மாச்சி உணவகம்

0

வேலணை “அம்மாச்சி” உணவகத்தை தரம் மிக்கதுடன் நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும்
முன்கொண்டு செல்ல உரிய பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும் என பிரதேச
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேலணை அம்மாச்சி உணவகத்தை அடுத்த ஆண்டுக்கான குத்தகைக்கு விடுவது மற்றும்
மேம்படுத்தல் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது உணவின் தரம் சுகாதாரம் உறுதி செய்யப்படுவதுடன் அதற்கான நடவடிக்கைகளை
பொது சுகாதார பகுதியினரும் அதிக அக்கறை செலுத்துவது அவசியம் என
வலியுறுத்தப்பட்டது.

சட்ட ஏற்பாடு

குறிப்பாக வேலணை அம்மாச்சி உணவகம் பாரம்பரிய உணவை மையமாக கொண்டதாக இருப்பதனால்
மக்களதும் சுற்றுலாவிகளது வருகையை ஈர்க்கும் வகையிலும் நேரகாலத்துடன்
இருப்பதும் அவசியம் என்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரால்
வலியுறுத்தப்பட்டது.

இதே நேரம் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பிரதேச சபையே சட்ட
ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன்போது உயிரினங்களின் பாதுகாப்பு, அவற்றின் நலன்களையும் அக்கறை கொண்டு
நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version