Home இலங்கை சமூகம் கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி

கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி

0

கண்டி (Kandy) – தெல்தெனிய (Teldeniya) காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் கணவனை இரும்பு கம்பியால் தாக்கி கொலைசெய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் நேற்றைய தினம் (08.09.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

உயிரிழந்த நபர் 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையென தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கணவருடன் நீண்ட காலமாக ஏற்பட்ட தகராறு முற்றியதால் மனைவி தனது கணவனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி காவல்துறையினரால் கைபற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .

Source: https://ibctamil.com/article/the-wife-who-beat-her-husband-to-death-1725841050

NO COMMENTS

Exit mobile version