Home இலங்கை சமூகம் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள்: வெளியான விதிமுறைகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள்: வெளியான விதிமுறைகள்

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விளம்பரப்படுத்துவதற்காக வீடு வீடாகச் செல்ல ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றுக்கு மாத்திரமே முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (08) கருத்து தெரிவித்த அவர், வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பரத்திற்காக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டமை தொடர்பிலும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதம்

அதன் படி, தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் மட்டுமே தமது வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வாகனம் தவிர அனைத்து வாகனங்களிலும் ஸ்டிக்கர் அல்லது மற்ற காட்சி காகிதங்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்றும் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version