Home உலகம் அமெரிக்காவில் பிறந்த உலகின் வயதான குழந்தை

அமெரிக்காவில் பிறந்த உலகின் வயதான குழந்தை

0

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அமெரிக்காவின் (United States) ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

வயதான குழந்தை

1994ஆம் ஆண்டு உறைந்த நிலையில் வைக்கப்பட்ட ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளமை உலகில் ஒரு புதிய சாதனையாக பாரக்கப்படுகின்றது. 

தாடியஸ் டேனியல் பியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த குழந்தை உலகின் மிக வயதான குழந்தை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை 26ஆம் திகதி, 30 ஆண்டுகளுக்கு முன்பு 62 வயதான நபர் ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி இந்த குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version