Home இலங்கை சமூகம் ஐபிசி தமிழ் தாயக கலையகத்தில் நினைவு கூறப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன்

ஐபிசி தமிழ் தாயக கலையகத்தில் நினைவு கூறப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன்

0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் அவர்களின் 18 வது ஆண்டு நினைவுதினம் இன்று ஐபிசி தமிழின் தாயக கலையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைகழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்களினால் நினைவுரை நிகழ்த்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நண்பர் யசிந்தன் மற்றும் ஐபிசி தமிழின் யாழ் கலையக ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.

ஊடகவியலாளர் சகாதேவன்

கடந்த 01.08.2007 அன்று 2007 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை யாழ். நகருக்கு மூன்று மைல் தொலைவில் கொக்குவிலில் உள்ள நிலக்‌ஷனின் வீட்டிற்கு அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் யாழ்.பல்கலைக் கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version